கடை உரிமையாளரை கடத்தி ரூ.2 லட்சம் கொள்ளை : கட்டிட உரிமையாளர் மீது புகார்!!

7 May 2021, 11:12 am
Shop Attack and kidnap- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : களியக்காவிளை பகுதியில் பலசரக்கு கடையில் 70ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சூறையாடி இரண்டு லட்சம் கொள்ளை போன நிலையில் கடையின் உரிமையாளரை கடத்தியதாக கட்டிட உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சதிஷ். இவர் களியக்காவிளை பி.பி.எம் சந்திப்பில் கதீஜா பீபி சொந்தமான கட்டிடத்தில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.

கடையை திடீரென காலி செய்ய கூறியதாக தெரிகிறது. இது சம்பந்தமாக சதீஷ் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் சதீஷ் காணவில்லை.

இந்த நிலையில் இன்று காலை சதிஷ்ன் கடை சூறை யாட பட்டிருந்தது குறித்து சதிஷின் அண்ணன் செல்வனுக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்த போது கடை ஷட்டர் உடைக்கப்பட்டு 70 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கபட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது சம்பந்தமாக என்ன நடந்திருக்கின்றன என பார்க்க அருகே உள்ள கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்க்க சென்ற போது நேற்று கட்டிட உரிமையாளர் கண்காணிப்பு கேமராக்களை அணைத்து வைக்க கூறியுள்ளது தெரியவந்தது.

இது சம்பந்தமாக செல்வன் களியக்காவிளை காவல்நிலையத்தில் தம்பி சதிஷை காணவில்லை கடை சூறை கொள்ளை சம்பந்தமாக புகார் அளித்துள்ளார். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 216

0

0