லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மீது புகார் அளிக்கணுமா..? இந்த வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளுங்க…!!

Author: Udayachandran
2 August 2021, 8:19 pm
Whats App Complaint - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் அரசு மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் லஞ்சம் பெறுவதை தடுப்பதற்காக இன்று மாவட்ட கலெக்டர் சமீரன் வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்து வைத்தார்.

கோவை மாவட்டத்தில் லஞ்சம் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் தெரிவிக்க 9597787550 என்ற பிரத்யேக வாட்ஸ் ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் இலஞ்சம் வாங்குவதை தவிர்க்கும் வகையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இலஞ்சம் தொடர்பான புகார்களை வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளார்.

இது தொடா்பாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் பொதுமக்கள் பாா்வையில் படும்படியும், விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் ‘லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்’ என்ற பலகை வைத்திருக்க வேண்டும்.

லஞ்சம் பற்றிய புகாா்களை நேரிலோ அல்லது செல்ஃபோன் வாயிலாகவோ தெரிவிக்கும் விதமாக காவல் துணைக் கண்காணிப்பாளா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலக முகவரி, செல் ஃபோன் எண்ணுடன் கூடிய பலகை வைத்திருக்க வேண்டும்.

இதில் இயக்குநா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, எண்- 293, எம்.கே.என்.சாலை, ஆலந்தூா், சென்னை-16. தொலைபேசி எண்: 044-24615989, 044-24615929, 044-24615949. காவல் துணைக் கண்காணிப்பாளா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, எண்-4, முதல் தெரு, ராமசாமி நகா், தீயணைப்புத் துறை அலுவலகம் அருகில், கவுண்டம்பாளையம், கோவை-30, தொலைபேசி எண்: 0422-2449500 மேற்கண்ட அலுவலகங்கள் தவிர கோவையில் லஞ்சம் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் அளிப்பதற்கு 95977 87550 என்ற பிரத்யேக வாட்ஸ் ஆப் எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலமும் பொதுமக்கள் லஞ்ச புகாா்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனின் இந்த அதிரடி நடவடிக்கை அரசு அதிகாரிகளிடம் கலக்கத்தையும், பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆட்சியருக்கு பொதுமக்கள் பரவலாக பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 205

0

0