வேலூர் : மேல்பாடி காவல் நிலையம் அருகே வாலிபர் சரத் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மேல்பாடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக காவல் டிஐஜி ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குகையநல்லூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சரத். அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். மேல்பாடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தி என்பவர் தன்னை அடிக்கடி மிரட்டுவதாக கூறி கடந்த 11ஆம் தேதி மேல்பாடி காவல் நிலையம் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் படுகாயமடைந்த அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மேல்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பொதுமக்கள் இளைஞர் தற்கொலைக் காரணமான உதவி ஆய்வாளர் கார்த்தி மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று திருவலம் – பொன்னை சாலையில் குகையநல்லூர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தீக்குளிப்புக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்த விசாரணையில் பகீர் தகவல் வெளியானது.
மேல்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் கார்த்திக் என்ற சப்-இன்ஸ்பெக்டர் தன்னை சாதிப் பெயரைச் சொல்லி அடித்து துன்புறுத்துவதாகக் குற்றம்சாட்டி, அந்தக் காவல் நிலையத்தின் அருகிலேயே நேற்று மாலை பெட்ரோல் ஊற்றி, தீக்குளித்தார் சரத்குமார். உடல் வெந்த நிலையில், சாலையில் உயிருக்குப் போராடிய சரத்குமாரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில், மருத்துவர்களின் கண்காணிப்பிலிருக்கிறார். அவர் தீக்காயங்களுடன் அலறித் துடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரின் நெஞ்சைப் பதறவைக்கின்றன.
அந்த வீடியோ காட்சிகளில் பேசும் சரத்குமார், ‘‘மேல்பாடி, திருவலம் காவல் நிலைய போலீஸார் என்னைத் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், நான் பட்டியலின இளைஞர் என்பதால் மேல்பாடி எஸ்.ஐ கார்த்திக் என்னை சாதிப் பெயரைச் சொல்லி அடிக்கிறார். சில நாள்களுக்கு முன்பு செருப்பால் அடிச்சாரு. எப்போது பார்த்தாலும், சாதிப் பெயரைச் சொல்லியே அடிக்கிறார். என் தம்பி கேஸுல என்னையும் சேர்த்துவிட்டுட்டாங்க. அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைனு சொன்னாலும் மிரட்டுறாங்க. அறுவடைப் பணம் வாங்குறதுக்காகப் போய்க்கிட்டிருந்த என்னை மடக்கி, எஸ்.ஐ கார்த்திக் ஹெல்மெட்டாலயே என் தலையில அடிச்சாரு. அப்புறம் கன்னத்துல அறைஞ்சாரு. எனக்கு வாழப் பிடிக்கலை. அதுனாலதான் கொளுத்திக்கிட்டேன்’’ என்றார்.
இது குறித்து சரத்குமார் உறவினர்களிடம் விசாரித்த போது, சரத்குமார் தம்பி அஜித் குமார் மீது 2019ல் மைனர் பெண்ணை கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மைனர் பெண் வேற சாதி பெண். இதனால் அந்த வழக்கில் சரத்குமார் பெயரையும் சேர்த்தி, வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதாகவும், அந்த வழக்கில் சரத்குமார் ஆஜராகததால் மேல்பாடி எஸ்ஐ கார்த்திக் சாதிவெறியில் நடந்ததாகவும், இதனால் சரத்குமார் தற்கொலை முடிவு எடுத்ததாகவும் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் சரக காவல் டிஐஜி ஆனி விஜயா விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்ட எஸ்ஐ கார்த்திக்கை பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.