பயணிகளுடன் வந்த பேருந்து ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு : பேருந்தை நிறுத்தாததால் இளைஞர்கள் வெறிச்செயல்!!

Author: Udhayakumar Raman
1 December 2021, 1:41 pm
Quick Share

புதுச்சேரி புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து நேற்று கடலூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தை மூன்று பேர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து வழிமறித்து பேருந்து ஓட்டுநரை அரிவாளால் வெட்டி விட்டு, பேருந்தின் கண்ணாடியை உடைத்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதையடுத்து பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சியைக் கொண்டு ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். அதில் கடலூர் பகுதியை சேர்ந்த பிரிதிவி ராஜன் மற்றும் சீனிவாசன், ஆண்டியை சேர்ந்த மருதுவுடன் இணைந்து தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. மருது பெரிய காட்டு பாளையம் பகுதியில் பேருந்து நிறுத்த முயன்றபோது நிறுத்தாமல் சென்றதால் அவரது நண்பர்களை அழைத்து வந்து மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைதொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த ரெட்டிசாவடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பேருந்து கண்ணாடியை உடைத்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

Views: - 304

0

0