திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டம் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

10 November 2020, 11:51 am
Quick Share

சென்னை: சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் சித்த மருத்துவமனை நடத்தி வந்தவர் மருத்துவர் திருத்தணிகாசலம். கொரோனாவுக்கு தான் மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். அதனை தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதலமைச்சருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த சைபர் காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து புகார்கள் அதிகரித்ததால், அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார். இதனிடையே, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது சார்பில், தந்தை கலியபெருமாள் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான் ஒரு பாரம்பரிய மருத்துவர் என்றும், கடலூர் வருவாய் துறை தனக்கு முறையான சான்றிதழ் வழங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே தான் தெரிவித்ததாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

Views: - 28

0

0

1 thought on “திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டம் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Comments are closed.