சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கேஆர் ஜெயராம் வேட்புமனு தாக்கல்!!

By: Babu
15 March 2021, 3:34 pm
KR jayaram admk - updatnews360
Quick Share

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என நாள்தோறும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற அவரை, ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் புடைசூழ வரவேற்பு அளித்தனர்.

சிங்காநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் நா. கார்த்திக் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Views: - 215

0

0