“எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது” – மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!

26 August 2020, 6:51 pm
Quick Share

பாடகர் எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எம்.ஜி.எம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த எஸ்.பி.பி மீண்டுவர வேண்டும் என உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களும், பிரபலங்களும் பல்வேறு கட்ட பிரார்த்தனைகளை முன்னெடுத்தனர். இதனை தொடர்ந்து நாள்தோறும் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வந்தது.

இந்த சூழலில் ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி-யின் உலல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி-யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், எஸ்.பி.பி சுயநினைவுடன் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால், அவரின் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.