தானியங்களைக் கொண்டு தேசியக் கொடியை உருவாக்கி சாதனை படைத்த இளைஞர்: பாராட்டி விருதுகளை வழங்கிய வட்டாட்சியர்

Author: kavin kumar
15 August 2021, 5:57 pm
Quick Share

மயிலாடுதுறை: சீர்காழியில் 24,418 மூவர்ண தானியங்ளைக் கொண்டு தேசியக் கொடியை வடிவமைத்து உலக சாதனை படைத்த இளைஞரை வட்டாட்சியர் பாராட்டினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் கீர்த்திவாசன். சமூக ஆர்வலரான இவர் Blood Donars Association என்ற இரத்ததான சேவை மையத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சியாக இயற்கை தானியங்களை பயன்படுத்தி இந்திய தேசியக் கொடியை உருவாக்கியுள்ளார்.

இதற்காக, 24,418 ஆரஞ்சு மற்றும் வெள்ளை சோள விதைகள் மற்றும் பச்சை பயிறை பயன்படுத்தி, 73.1 x 33.5 cm அளவில் இந்திய தேசியக் கொடியை 3 மணி நேரம் 23 நிமிடங்கள் 21 நொடிகளில் உருவாக்கியுள்ளார். இளைஞரின் இந்த முயற்சியை JACKHI BOOK OF WORLD RECORDS அமைப்பு புதிய உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் விருதுகளை சீர்காழி வட்டாட்சியர் சண்முகம், கீர்த்திவாசனிடம் வழங்கி பாராட்டினார்.

Views: - 205

1

0