கோவையின் தாகத்தை தணிக்கும் சிறுவாணி : அணையின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வால் பொதுமக்கள் ஹேப்பி!!
Author: Udayachandran RadhaKrishnan11 October 2021, 11:53 am
கோவை : சிறுவாணி அணையின் நீர்மட்டம் 43.50 அடியாக உயர்ந்துள்ளதால் குடிநீர் பிரச்சினை இருக்காது என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் 26 வார்டுகள் நகரை ஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீர் ஆதாரமாக உள்ளது. அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அணையின் நீர் மட்டம் ஆனது படிப்படியாக குறைந்தது. மூன்று அடிக்கு கீழே சென்றது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களாக சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக அணைக்கு செல்லும் முக்தியாறு பட்டியலாற்றில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் அண்மையில் பெய்துவரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 43.50 அடியாக உயர்ந்துள்ளது. மாநகராட்சி சார்பாக 96 எம்எல்டி குடிநீருக்காக எடுக்கப்படுகிறது. அடுத்த வருடம் மார்ச் வரை எந்த பிரச்சினை இருக்காது என்றார்.
0
0