வெயிலின் தாக்கத்தால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிவு : குடிநீருக்காக எடுக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

Author: Babu Lakshmanan
12 March 2022, 1:30 pm
Quick Share

கோவை: வெயிலின் தாக்கத்தால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

சிறுவாணி அணையில் இருந்து கோவை மாநகரில் 26 வார்டுகளுக்கும், நகரையொட்டிய கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்குப் பருவமழை நன்றாகப் பெய்ததால் அணையின் நீர்மட்டம் 874 மீட்டர் வரை உயர்ந்தது. முழுக் கொள்ளளவு சிறுவாணி அணையைப் பராமரிக்கும் கேரள அரசு, பாதுகாப்பு காரணமாக அணையின் முழுக் கொள்ளளவான 878.50 மீட்டரை அடைய விடாமல், அணையில் இருந்து தண்ணீரை ஆற்றில் திறந்து விடுகிறது.

இதன் காரணமாக, 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு, சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டவில்லை.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 871 மீட்டராக இருந்த அணையின் நீர்மட்டம், பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் தாக்கத்தால் படிப்படியாக சரியத் தொடங்கியது.

நேற்றைய நிலவரப்படி, சிறுவாணி அணையின் நீர்மட்டம் 868 மீட்டராக உள்ளது. 7 கோடி லிட்டர்
நீர்மட்டம் குறையத் தொடங்கி உள்ளதால், கடந்த நாள்களில் குடிநீருக்காக தினமும் 9 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, 7 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, தற்போது அணையில் உள்ள நீர் இருப்பு, மே இறுதி அல்லது ஜூன் வரை தாக்குப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணையில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்தால், அணையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவும் மேலும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது, என்றனர்.

Views: - 341

0

0