பாலியல் வழக்கு: சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

Author: Udhayakumar Raman
1 December 2021, 9:36 pm
Quick Share

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார்ப் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா ஆவார். இவர் தனது பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் கேளம்பாக்கம் காவல்துறையினர் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பிறகு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.இதனால் சிவசங்கர் பாபா தலைமறைவாகவே அவரை சிறப்பு காவல்படையினர் டெல்லியில் கைது செய்தனர்.

தமிழகம் அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் பல கட்ட விசாரணைகள் நடந்தன. இதில் பள்ளியில் உள்ள அவர் அறையில் நடந்த சோதனையில் பல தகவல்கள் வெளியாகியது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார்.இந்த ஜாமீன் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சிவசங்கர் பாபா சார்பில் மீண்டும் ஜாமீன் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை இரண்டாம் முறையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Views: - 296

0

0