வீடு புகுந்து வழக்கறிஞர் தம்பதிக்கு அரிவாள் வெட்டு… தடுக்க முயன்றவர் மீதும் சரமாரி தாக்குதல்.. சிவகங்கையில் அதிர்ச்சி!!

Author: Babu Lakshmanan
22 March 2022, 8:18 pm
Quick Share

சிவகங்கை : வழக்கறிஞர்களாக பணிபுரியும் கணவன் மனைவியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் என்பவரின் மகன் குமரகுரு. இவரது மனைவி வித்யா ஸ்ரீ. கணவன், மனைவி இருவரும் காரைக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகின்றனர். இவரது வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர் கணபதி என்பவருக்கும், குமரகுருவுக்கும் வழக்கு ஒன்றில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கணபதி மற்றும் அவரது நண்பர்கள் இருவர் குமரகுரு வீட்டிற்குள் புகுந்து குமரகுரு மற்றும் அவரது மனைவி இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்த அவ்வழியாகச் சென்ற மாரி என்பவர் தடுக்க முயன்ற போது அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து உயிருக்கு போராடிய மூவரையும் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். மேலும் தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 571

0

0