2 வருடமாக மகனை காணாமல் ஊர் ஊராக சுற்றும் தாய் : கையில் சுவரொட்டி ஏந்தி தேடும் பரிதாபம்!!

18 August 2020, 12:50 pm
Missing Boy - Updatenews360
Quick Share

சிவகங்கை : செல்போனை பயன்படுத்தாதே என தாய் திட்டியதால் மாயமான மகனை இரண்டு வருடமாக ஊர் ஊராகச் போஸ்டர் உடன் சுற்றித் திரியும் தாயின் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதன். கடந்த 2017 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று மேல் கல்விக்காக மதுரை கீழவாசல் பகுதியில் இருக்கக்கூடிய தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்ட விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சொந்த ஊரில் உள்ள தாயிடம் பேசுவதற்காக மகனின் விருப்பத்திற்கு ஏற்ப புதியதாக ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். புதிய போன் வந்தது முதல் படிப்பில் கவனம் குறைந்துள்ளது. ஆசிரியரின் அறிவுரை பேரில் போனை பயன்படுத்தாதே என தாய்-மகன் ஹரிஹரசுதனை திட்டியுள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த மாணவன் சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு விடுதியை விட்டு வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் சுமார் இரண்டு ஆண்டுகள் கடந்து வீட்டிற்குப் போகவில்லை பல இடங்களில் தன் மகனை தேடி பார்த்த தாய் காணாத நிலையில் அவர் செல்போனில் அடிப்படையாக கொண்ட விசாரணை நடத்தியபோது இறுதியாக அவர் செல்போனை திருவனந்தபுரத்தில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இருப்பினும் தன் மகன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் ஒருபக்கமும் தாய் தன் மகனை எங்கேயாவது பார்த்து விட மாட்டோமா என்ற நம்பிக்கையை மகனின் புகைப்படம் ஏந்திய சுவரொட்டியுடன் தமிழகம் மற்றும் கேரளாவில் சுற்றி வரும் சம்பவம் பார்ப்பவர் கண்களில் கண்ணீர் குளத்தை உருவாக்கியுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக மகன் எங்கே சென்றான் என்று தெரியாமல் தாய் கண்ணீர் மல்க காத்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.