குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய விசிக பிரமுகர் : போலீசாருடன் தகராறு செய்துவிட்டு தலைமறைவு… சிறுத்தை சிக்குமா..?
Author: Babu Lakshmanan8 November 2021, 12:51 pm
சிவகங்கை : குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி செயலாளராக மோகன்ராஜ் என்பவர் இருந்து வருகிறார். இவர், தீபாவளி தினத்தன்று, தலைக்கேறும் போதையில் இருந்த அவர், சட்டவிரோதமாக தனது காரையும் இயக்கிச் சென்றுள்ளார். சாலையில் தாறுமாறாக ஓடிய கார், அங்கிருந்த பெட்ரோல் பங்க் மீது விபத்துக்குள்ளானது.
தீபாவளியையொட்டி பெட்ரோல் பங்க்கிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் விசிக பிரமுகர் மோகன்ராஜ் மற்றும் அவருடன் இருந்தவர்களை மீட்டு, அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், வெளிக்காயம் ஏதுமில்லை, ஆனால் உள்காயம் இருப்பதால், காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து, மோகன்ராஜ் அங்கு வாக்குவாதத்தில ஈடுபட்டுள்ளார்.
இதையறிந்து வந்த போலீசாரிடமும், சிறுத்தைகள் வாக்குவாதம் செய்தனர். மேலும், தகாத வார்த்தைகளிலும் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக காவலர்கள் அங்கு நடந்தவற்றை வீடியோவாக பதிவு செய்தனர். இந்தக் காட்சிகள் தற்போது சமுக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து, விசிக பிரமுகர் மோகன்ராஜ் மீது பள்ளத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
0
0