ஹாக்கி பயிற்சியின் போது மாணவிகளிடம் “சில்மிஷம்“ : திமுக பிரமுகர் கைது!!

21 August 2020, 12:02 pm
Dmk Person Arrest - Updatenews360
Quick Share

சிவகங்கை : காரைக்குடியில் பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரைச் சேர்ந்த ஷங்கர். இவர் திமுக மாணவரணி நிர்வாகியாக உள்ளார். மேலும் ஹாக்கி கிளப் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் ஏராளமான மாணவ மாணவிகள் ஹாக்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

திமுக மாணவரணி நிர்வாகி ஷங்கரிடம் கரைக்குடி தனியார் பள்ளியில் பயின்று வரும் 15 வயது மாணவி மற்றும் அவரது 14வயது சகோதரி ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த இரு மாணவிகளுக்கும் ஷங்கர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவிகள் பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி மகளிர் காவல்நிலைய போலீசார் ஷங்கரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் ஷங்கரின் உதவியாளர் கண்ணன் என்பவனையும் உடந்தையாக இருந்ததற்காக கைது செய்தனர்.

Views: - 0 View

0

0