அண்ணாத்த திரைப்படத்தை பார்த்து சிவகார்த்திகேயன் சொன்ன கமெண்ட்ஸ் : ரசிகர்கள் கொண்டாட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan4 November 2021, 1:05 pm
நாடு முழுவதும் தீபாவளி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பண்டிகையின் போது யாருடைய படம் ரிலீஸ் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பர்.
இந்த முறை சூப்பர் ஸ்டார் படம் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்த படம் அண்ணாத்த.
இந்த படத்தில் ட்ரெய்லர் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. 70 வயதானாலும் தலைவர் வேற லெவல் என கொண்டாடினர். இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அதில் எங்களை மகிழ்ச்சிபடுத்தியதற்கு நன்றி தலைவா, தலைவரின் ரசிகன் என்றுமே தலைவரின் ரசிகன் தான் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
116
13