மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்ற போது பாலியல் தொல்லை : சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது!!

11 July 2021, 10:01 am
Shivshankar Baba - Updatenews360
Quick Share

சென்னை : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்குகள் பதிவான நிலையில் மேலும் 2 போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார்.

இந்நிலையில்,அவரை மேலும் ஒரு போக்சோ வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்றபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சிபிசிஐடி தகவல் தெரிவித்திருக்கும் நிலையில், அவர் மீதான 3 வது வழக்கும் போக்சோவாக மாற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 109

0

0