பள்ளி மைதானத்தில் வேஷ்டி மற்றும் செருப்புடன் கிடந்த எலும்புக்கூடு : கன்னியாகுமரி அருகே பரபரப்பு!!
27 January 2021, 7:19 pmகன்னியாகுமரி : நாகர்கோவில் பள்ளி மைதானத்தின் அருகே எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே என் ஜி ஓ காலனி தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் பின்பக்கத்தில் உள்ள மைதானம் ஒன்றில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரின் எலும்புக்கூடு இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் அருகில் வேஷ்டி செருப்பு ஆகியவை கிடைக்கின்றன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த நபர் இறந்த நிலையில் அவரது எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை அவரது மரணமும் எப்படி நடந்தது என்பது தெரியாத நிலையில் நாகர்கோவில் டி.எஸ்.பி வேனுகோபால் தலைமையில் சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தி வந்து அடித்து கொலை செய்யபட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0