வனப்பகுதியில் பெண் யானையின் மண்டை ஓடு, எலும்புகள் கண்டெடுப்பு: வனத்துறையினர் விசாரணை..!!

Author: Rajesh
17 March 2022, 9:15 am
Quick Share

கோவை: நரசிபுரம் வனப்பகுதியில் இறந்த பெண் யானையின் மண்டை ஓடு, எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பேளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட நரசிபுரம் வனப்பகுதியில் வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கடுக்காய்பாறை அருகே சென்ற போது இறந்த யானையின் மண்டை ஓடு, மற்றும் எழும்புகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவர் குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த முதுமலை வன கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார். அதில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு கோரை பற்களை மண்டை ஓடு எழும்புடன் பொருத்தி பார்த்து ஆய்வு செய்தனர்.

ஆய்வில், இறந்தது சுமார் 7 வயது மதிக்கத்தக்க பெண் யாணை என்பது கண்டறியபட்டது. இதையடுத்து அங்கிருந்த எழும்புகள் மரபனு சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 484

0

0