விஜயகாந்த் மற்றும் பிரேமலதா மீது அவதூறு : தினமலர் நாளிதழை கொளுத்திய தேமுதிகவினர்!!

3 September 2020, 7:51 pm
Dinamalar- Updatenews360
Quick Share

திருப்பூர் : தேமுதிக கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா அவர்களை அவதூறாக சித்தரித்து செய்தி வெளியிட்ட கோவை தினமலர் நாளிதழை காலணியால் அடித்து தீயிட்டு எரித்தனர் .

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் நகர தலைவர் மணி தலைமையில் தேமுதிகவினர் தினமலர் நாளிதழை காலணியால் அடித்து பின்னர் தீ வைத்து எரித்தனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா அவர்களை தினமலர் நாளிதழில் அவதூறாக சித்தரித்து செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை கண்டித்து தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

அதன் பின்பு காவல் நிலையம் முன்பு திரண்ட தேமுதிகவினர் தினமலர் நாளிதழ் காலணியால் அடித்து பின்னர் தீ வைத்து எரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குண்டடம் ஊராட்சி ஒன்றிய தலைவர் குப்புசாமி மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0