கள்ளக்காதலியுடன் பேசிக்கொண்டிருந்த கணவர் : நடுரோட்டில் செருப்பை கழட்டி அடித்த மனைவி!!

By: Udayachandran
4 October 2020, 3:35 pm
Wife Attack Husband - Updatenews360
Quick Share

நீலகிரி : கள்ளகாதலியுடன் பேசிக்கொண்டிருந்த கணவரை பார்த்த மனைவி, நடுரோட்டில் செருப்பை கழட்டி இரண்டுபேரையும் வெளுத்து வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் பகதூர் சிங் என்பவர் அவர் கள்ளகாதலி ஆதயாவுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது அவர் மனைவி லக்சிமா விடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார்.

இதை பார்த்து ஆத்திரமடைந்த லக்சிமா கள்ளக்காதலியை கண்டித்துள்ளார். ஆனால் மீண்டும் மீண்டும் கணவரை வர செல்லி அவருடன் தொடர்பில் இருந்த கள்ள காதலியை நடுரோட்டில் கட்டிபுரண்டும் செருப்பை கொண்டும் சண்டைபோட்டு கள்ள காதலிக்கு கணவரையும் செருப்பால் அடித்தார்.

இதில் கள்ள காதலி அதயாவுக்கும் மனைவி லக்சிமாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் சண்டையை விலக்கிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Views: - 52

0

0