டிஜிட்டல் மீட்டர்களுக்கு பதில் ஸ்மார்ட் மீட்டர்கள் : மின் வாரியத்தில் ஏற்படும் இழப்பை தவிர்க்க நடவடிக்கை!

2 July 2021, 5:40 pm
Senthil Balahi- Updatenews360
Quick Share

மதுரை : மின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர் முறை அமல்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மதுரை, திருப்பரங்குன்றத்தில் மின்வாரிய அதிகாரிகளுடன் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள ரூ.900 கோடி இழப்பீட்டை சரி செய்வதற்காக, தற்போது இருக்க கூடிய டிஜிட்டல் மின் மீட்டர் முறையை ஸ்மார்ட் முறையாக மாற்றுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இதை தான் தமிழக முதல்வர் இலக்காக கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மின்வாரியத்தில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அந்த இழப்பை ஈடு செய்வதற்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதனை செயல்படுத்துவதற்கான சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Views: - 168

0

0