திருச்சிக்கு அடுத்தபடியா கோவை? கடத்தல் தங்கம் சிக்கியது!!
19 November 2019, 8:09 am
கோவை : சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் 46 லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது.
சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணிகள் இருவரிடம் ரூபாய் 46 லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது. சார்ஜாவில் இருந்து நள்ளிரவு ஏர் அரேபியா விமானம் கோவை விமான நிலையம் வந்தது சுங்க வரித் துறையினர் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
திருச்சியை சேர்ந்த அப்துல் ரஷீத் மற்றும் மாணவர் பாஷா ஜாபர் ஆகியோர் 46 லட்சம் மதிப்பிலான 1276 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தனர். இதைக் கண்டறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.