வெளிநாடுகளில் இருந்து 1 கிலோ தங்கம் கடத்தல்.. வீடியோ கேம் சாதனத்தில் மறைத்து வைத்து நூதனம்.. 2 பயணிகளிடம் விசாரணை!

Author: Udayachandran RadhaKrishnan
29 October 2022, 6:00 pm
Gold Smuggling - Updatenews360
Quick Share

திருச்சி விமான நிலையத்தில் துபாய், கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்து 2 பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சிக்கு கோலாலம்பூரில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் கொண்டு வந்த வீடியோகேம் மின்சாதனத்தில் இருந்த 517.500 கிராம் கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது.

இதன் மதிப்பு 34 லட்சத்து 26 ஆயிரத்து 380 ரூபாய் ஆகும். இதேபோல துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவரிடம் இருந்த 526.500 கிராம் கடத்தல் தங்கம் பிடிபட்டது. இதன் மதிப்பு 34 லட்சத்து 72 ஆயிரத்து 613 ரூபாய் ஆகும்.

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ள வான் நுண்ணறிவு பிரிவு போலீசார், 2 பயணிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Views: - 323

0

0