தமிழக கேரள எல்லைப் பகுதியில் லாரிகள் மூலம் கஞ்சா கடத்தல்..

28 February 2021, 11:43 am
Quick Share

தமிழகத்தில் இருந்து லாரிகள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக கேரள மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பாலக்காடு போலீசார் தமிழக கேரள எல்லைப் பகுதியான வாளையார் பகுதியில் நேற்று இரவு சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தமிழக பதிவு எண் கொண்ட காய்கறி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். சேலத்தில் இருந்து காய்கறி லோடு ஏற்றிச் சென்ற அந்த லாரியில், பெட்டி பெட்டியாக ஜெலட்டின் வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தி வந்து இருப்பது போலீசார் சோதனையில் தெரியவந்தது.

கஞ்சா சோதனைக்காக வந்த கேரள போலீசார், பெட்டி பெட்டியாக வெடிபொருட்கள் சிக்கயதை தொடர்ந்து அதை பாலக்காடு காவல் நிலையம் கொண்டு சென்றனர். லாரியில் இருந்த காய்கறிகளை அகற்றி விட்டு பெட்டி பெட்டியாக இருந்த வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

லாரியில் இருந்த பெட்டிகளிலில் 50000 ஜெலட்டின் குச்சிகள், 50 மூட்டை டெட்டனேட்டர்களையும், 4500 எலக்ட்ரிக் டெடனேட்டர்கள் கடத்தி வரப்பட்டு இருப்பது தெரியவந்தது.பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களின் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் என கேரள போலீசார் தெரிவித்தனர்.


இது தொடர்பாக சேலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் இளவரசன் , கிளினர் கார்த்திக் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் வெடிபொருட்கள் மன்னார்காடு மாவட்டத்திற்கு கடத்திச் செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது .

இதனை தொடர்ந்து வெடிபொருட்களை தமிழகத்தில் இருந்து அனுப்பியது யார் என்பது குறித்தும் , கேரளாவில் அதை யார் வாங்குகிறார்கள் என்பது குறித்தும் கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் பெட்டி பெட்டியாக வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 9

0

0