விமான நிலையத்தில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் கடத்தல்: பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை

Author: kavin kumar
13 October 2021, 2:22 pm
Quick Share

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் 21லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட இரண்டு பயணிகளை அதிகாரிகள் தனியாக அழைத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டையில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை உருக்கி மறைத்து வைத்துக் கொண்டு வரப்பட்டதை கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவர்கள் சென்னையை சேர்ந்த பிரதீப் குமார் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் என தெரியவந்தது தொடர்ந்து அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பிடிப்படிப்பட்ட தங்கத்தின் ரூ20.42 லட்சம் மதிப்பு என அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இரண்டு பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 255

0

0