திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தனியார் கல்லூரிக்குள் புகுந்த பாம்பு, மாணவியை கடித்ததில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அய்தாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகள் மீனா (18). இவர் திண்டுக்கல் எம்.வி.எம். மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார். வாரத்தில் முதல் நாள் என்பதால் கல்லூரியில் அசம்பிளி ஹாலில் கூடுவது வழக்கம்.
அதன்படி, இன்று காலை அனைத்து மாணவிகளும் அந்த அரங்கில் ஒன்று கூடினர். கல்லூரி முதல்வர் மாணவிகளிடம் பேசிக் கொண்டு இருந்தபோது, கூட்டத்துக்குள் கொடிய விஷத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பு புகுந்தது. இதனால் மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர்.
அப்போது ,வேகமாக சென்ற பாம்பு மீனாவை கடித்தது. இதனால் அவர் கூச்சலிட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து மீனாவை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
மேலும், கல்லூரி ஊழியர்கள் அந்த பாம்பை அடித்து கொன்றனர். இறந்த பாம்புடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மீனாவை சிகிச்சைக்கு கொண்டு வந்து டாக்டரிடம் அந்த பாம்பையும் காண்பித்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.