கிணற்றில் பதுங்கிய கண்ணாடி விரியன் : வலையில் சிக்க வைத்த வனத்துறை!!

25 October 2020, 2:46 pm
Snake Caught - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே கிணற்றுக்குள் பதுங்கியிருந்த சுமார் 6அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் பகுதியில் பெரியசாமி என்பவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இன்று காலை அவரது விளை நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றின் அருகே சென்றுள்ளார். அப்போது கிணற்றில் உள்ள மோட்டார் அருகே கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றுக்குள் பதுங்கியிருந்த சுமார் 6அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். இச்சம்பவம் அருகே உள்ளவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Views: - 13

0

0