குடியிருப்பு பகுதியில் நுழைந்த பாம்பு : விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அலறியடித்து ஓட்டம்!!

18 October 2020, 1:11 pm
Ooty Snake - Updatenews360
Quick Share

நீலகிரி : மஞ்சூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் எட்டடி நீளமுள்ள சாரைப்பாம்பு நுழைந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் வனத்தை ஒட்டி உள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படும்.

குறிப்பாக தேயிலை தோட்டங்களில் கரடி, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

இந்நிலையில் மஞ்சூர் கீழ்குந்தா பாலம் அருகே உள்ள குடியிருப்பு அருகே உள்ள புதரில் இருந்து எட்டடி நீளமுள்ள சாரைப்பாம்பு குடியிருப்புக்குள் புக முயன்றது இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர் மேலும் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்பு பாம்பு அங்கு இருந்த புதருக்குள் சென்று மறைந்தது. சமீபகாலமாக இப்பகுதியில் பாம்புகள் குடியிருப்பு பகுதியை நோக்கி படையெடுத்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 23

0

0