மதுபான பெட்டிக்குள் ரெஸ்ட் எடுத்த பாம்பு: அதிர்ச்சியில் ஊழியர்கள் செய்த காரியம்…வணிக வளாகத்தில் பரபரப்பு..!!

Author: Aarthi Sivakumar
7 December 2021, 11:54 am
Quick Share

கோவை: கோவையில் மதுபான கடை ஒன்றிற்கு வந்த மதுபெட்டிக்குள் பாம்பு இருந்ததை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை சரவணம்பட்டி அருகே ப்ரோசோன் என்ற வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் ‘எலைட்’ மது விற்பனையகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த விற்பனையகத்திற்கு ‘பீர்’ மது வகைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு பெட்டியை திறந்த போது அதனுள் சுமார் 4 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இருந்தது. இதனை பார்த்த டாஸ்மாக் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து அந்த பாம்பை பிடித்த ஊழர்கள் அதனை அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். விற்பனைக்காக வந்த மது பெட்டியில் பாம்பு இருந்த சம்பவம் டாஸ்மாக் பணியாளர்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

Views: - 202

0

0