தனது 100 ஏக்கர் நிலத்தில் இலவச மருத்துவமனை கட்டிய சமூக ஆர்வலர்! இலவச மருந்து அங்காடியை திறந்து வைத்தார்!!

Author: Udayachandran
2 October 2020, 2:16 pm
Social Worker - updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : இலவச மருத்துவமனை மற்றும் இலவச மருந்து அங்காடியை திறந்து சமூக ஆர்வலர் ஒருவர் தமிழகத்திற்கே முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராம பகுதியை சேர்ந்தவர்சமூக ஆர்வலர் அமானுல்லா. ஜமீன் குடும்பத்தை சேர்ந்த இவர் ஏழை எளியவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தனது 100 ஏக்கர் மாந்தோப்பை இலவச மருத்துவமனையாக மாற்றி கடந்த பத்து வருடங்களாக பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் சிகிச்சை அளிக்கும் விதமாக தனது மருத்துவமனையை மாவட்ட நிர்வாகத்திற்கு இலவசமாக ஒப்படைத்தார். தேசத்தந்தை காந்தி பிறந்த நாளான இன்று அத்திமுகம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் ஓசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேசியதொழிற் சங்க தலைவருமான மனோகரன் பங்கேற்று இலவச மருந்தகத்தை திறந்து வைத்தார்.

முன்னதாக சமூக ஆர்வலர் அமானுல்லா மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். விழாவில் அத்திமுகம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிகாந்த், ஹனிக் அமால்லா, சுயேப் முகமது ஜான், ஏ.செட்டிப்பள்ளி ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் ராதம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் திறப்பு விழாவில் பங்கேற்றனர். விழா நிறைவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

Views: - 56

0

0