ஏழைப்பெண்ணுக்கு சீர்வரிசை கொடுத்து திருமணம் செய்து வைத்த சமூக ஆர்வலர்கள் : குவியும் பாராட்டு!!

29 November 2020, 11:30 am
Marraige - Updatenews360
Quick Share

கரூர் : ஏழைப் பெண்ணுக்கு சீர்வரிசை கொடுத்து திருமணம் செய்து வைத்த சமூக ஆர்வலர்களின் செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கருர் அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சாமியப்பன். இவரதுஅனைவி பொம்மாயி. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இத்தம்பதிகளுக்கு கோகிலா (வயது 22), சர்மிளா(வயது 17), அகிலா (வயது 13) என்ற 3 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சாமியப்பன் விபத்திலும், பொம்மாயி உடல்நலக்குறைவாலும் இறந்து போயினர். இதனையடுத்து 3 பேரும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தனர்.

இந்நிலையில் கோகிலாவுக்கு திருமணம் செய்ய சக்கரக்கோட்டையச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டாருக்கு சீர்வரிசை கொடுக்க முடியாத சூழலில் கோகிலா இருந்துள்ளார்.

இதனையறிந்த அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோகிலாவிற்கு பட்டுப்புடவையும், தங்கத்தில் தாலி, பாத்திரங்கள், கோகிலாவின் பாட்டி மற்றும் அவரது சகோதரிகளுக்கு புதுத்துணிகள் வாங்கி கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

Views: - 0

0

0