ஸ்டாலினுக்கு “அடிமேல் அடி“…..!டிவிட்டரில் டிரெண்டாகும் #தமிழர்_துரோகி_திமுக!!

4 November 2020, 5:37 pm
DMK - Updatenews360
Quick Share

தமிழகத்தில் அரை நூற்றாண்டுகளாக திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக மட்டுமே மாறி மாறி அரியாசனம் ஏறி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பிற கட்சிகள் எவ்வளவு முயற்சி செய்தாலும், இந்த இரு பெரும் கட்சிகளை தாண்டி அரியணையில் அமரமுடிவதில்லை.

இந்த இருபெரும் கட்சிகளுக்குள் இருக்கும் ஒற்றுமை, சாதனைகளை விளக்கியும், சம்பவங்கள், நடவடிக்கைகளை குறிப்பிட்டு விமர்சனத்தை முன் வைத்து மட்டும் அரசியல் செய்து வருகின்றனர்.

ஒரு கட்சி நலத்திட்டங்களை செய்தால், அது அரசியல் நோக்கமாக இருந்தால் எதிர்கட்சி அதன் மீது குற்றம்சாட்டுவதும்இ விமர்சிப்பது தொடர்கதையாகி வருகிறது. இப்படி அரசியல் நிலைமை தமிழகத்தில் நிலவி வந்தாலும், அதிமுக தொடர்ந்து 2011ம் ஆண்டு முதல் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்துள்ளது.

திராவிட கட்சிகள் ஆட்சி மீது மக்களின் மனநிலை என்ன? வெளியான புது கருத்துக்  கணிப்பு - Lankasri News

இதற்கு முக்கிய காரணம் கடந்த 2006ம் ஆண்டு நடந்த திமுக ஆட்சியின் போது ஏற்பட்ட அவலங்களை இன்றளவும் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மின்வெட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, ஈழ தமிழர் படுகொலை, கச்சத்தீவு பிரச்சனை, மீத்தேன் திட்டம், நீட் தேர்வு குறித்து அதிமுக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

இதற்கு திமுக தக்க பதிலடியோ, விளக்கங்களோ அளித்தாலும், அதிமுக ஏற்றுக்கொள்வதும் இல்லை. போதாகுறைக்கு தற்போது சமூக வலைதளங்களில் என்ற பெரிய ஆயுதம், ஒரு கட்சி செய்யும் சரியோ, தவறோ அதை பாராட்டியும், விமர்சனமும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் நெட்டிசன் ஒருவர், தமிழர்களுக்கு திமுக விரோதியாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்தபோது, அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து பேசியிருந்த செய்தியுடன் கூடிய நாளிதழை பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து நெட்டிசன்கள் சிலர், திமுக ஆட்சி காலத்தில் நடந்த மின்வெட்டு தொடர்ந்ததை சுட்டிக்காட்ட, மற்றொருவர், தமிழகத்தை இருளில் மூழ்கடித்து, தொழில் வளத்தை அழித்து வேலையில்லா திண்டாட்டம் உருவாக்கி, தற்போது தமிழகத்தை மீட்போம் என திமுக கூறுவது நியாயமா என பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது நடந்த பல்வேறு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, நெட்டிசன்கள் தங்களது ஆதங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் #தமிழர்துரோகிதிமுக என்றும் ஹேஷ்டேக்குளை டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

Views: - 86

0

0