சிறுமியை திருமணம் செய்து துன்புறுத்திய ராணுவ வீரருக்கு 22 ஆண்டுகள் சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Author: Aarthi Sivakumar
16 September 2021, 3:34 pm
Quick Share

மதுரை: 18 வயது நிறைவடையாத சிறுமியைத் திருமணம் செய்த வழக்கில் ராணுவ வீரருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் பெத்தனசாமி. மனைவியை பிரிந்து வாழும் இவர் தனது 18 வயது பூர்த்தியடையாத 2வது மகளை உத்தபாளையம் சீப்பலாக்கோட்டையில் உள்ள சகோதரி கருப்பம்மாளின் மகன் ராணுவ வீரரான பிரபுவுக்கு கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தார்.

திருமணம் முடிந்ததும் சிறுமியை பிரபு தான் பணிபுரிந்த ஜம்மு காஷ்மீருக்கு அழைத்துச் சென்றார். ஆந்திராவுக்கு இடமாறுதல் ஆனதும் அவரை ஆந்திராவுக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், ஆந்திராவிலிருந்து தப்பி மதுரைக்கு வந்த சிறுமி, முத்துப்பட்டியிலுள்ள முகாமில் தங்கினார்.

இதுதொடர்பாக சிறுமியின் தாய் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் ராணுவ வீரர் பிரபு, அவரது தாயார் கருப்பம்மாள், சிறுமியின் தந்தை பெத்தனசாமி ஆகியோர் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வாளர் ஹேமமாலா வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தார்.

இந்த வழக்கை மதுரை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா விசாரித்து, பிரபுவுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பெத்தனசாமி, கருப்பம்மாளுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Views: - 194

0

0