எனக்கு எதிராக மொட்டை கடிதம் எழுதி தேர்தல் நேரத்தில் சிலர் கோஷ்டி மோதல் ஏற்படுத்த நினைப்பதாக நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புருசை ஆதரித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளரும் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவுமான ரூபி ஆர் மனோகரன், திறந்தவேனில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலுங்கடி, கோதைசேரி, ஏர்வாடி, தளவாய்புரம், திருக்குறுங்குடி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
மேலும் படிக்க: ஒரு நிமிடம் பதறிய ஜோதிமணி.. வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டு வாக்கு சேகரிப்பு : கரூரில் பரபரப்பு!
பின்னர், அங்கிருந்தவர்களிடம் பேசிய ரூபிமனோகரன், நெல்லை தொகுதி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் கடின உழைப்பாளி. 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு உழைத்துக் கொண்டிருப்பவர். ஒரு ஏழைத்தாயின் மகன் அவரிடம் காசு இல்லை. நாங்குநேரி தொகுதியில் பல வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார், என தெரிவித்தார்
பின்னர். நாங்குநேரியில் பூத் கமிட்டி அமைக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் குறை கூறிகடிதம் எழுதியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படி ஒரு கடிதம் எழுதியதாக எனக்கு தெரியவில்லை. எனக்கு வேண்டாதவர்களால் எழுதப்பட்ட ஒரு மொட்டை கடிதமாக கூட இருக்கலாம். கடிதத்தில் உண்மை எதுவுமில்லை.
மேலும் படிக்க: வைகோவுக்கு ஷாக் கொடுத்த அண்ணாமலை… பாஜகவில் கார்த்திகேயன் கோபாலசாமி… யார் இவர்…?
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அவரவர் தகுதிக்கு ஏற்றார் போல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்குநேரி தொகுதியை பொருத்தவரை, நான் மக்கள் பணி செய்து கொண்டு இருக்கின்றேன். காய்த்த மரம் தான் கல்லடி படும். நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள். அதில் உண்மையில்லை. கடிதத்தை எழுதியவர்களை மக்கள் பாராட்ட மாட்டார்கள். வெறுக்கத்தான் செய்வார்கள்.
கட்சிக்கு பெரிய தவறை செய்து வருவதை விரைவில் அவர்கள் புரிந்து கொள்வார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை கோஷ்டி மோதல் எதுவும் இல்லை. தேர்தல் நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த ஒரு சிலர் எடுக்கும் முயற்சிதான் இது, மற்றபடி கோஸ்டிபூசல் எதுவும் இல்லை. காங்கிரஸ் கட்சி வளர்ச்சியை நோக்கி செல்வதால் தான் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
நாங்குநேரியை பொருத்தவரை சர்ச்சை எதுவும் இல்லை. மாவட்ட தலைவருடன் இணைந்து பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். நாளை நெல்லை ராகுல் வருவதை முன்னிட்டு நாங்குநேரியில் இருந்து பத்தாயிரம் பேர் கலந்து கொள்ள இருக்கிறோம், என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.