வேலூர் மாவட்டம் காட்பாடி திருவலம் அடுத்த லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயா (வயது 45) இவரது கணவர் சேட்டு இந்த தம்பதியருக்கு இந்து குமார் என்கின்ற மகன் உள்ளளர்.
கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ஜெயாவின் கணவர் சேட்டு இறந்த நிலையில் ஜெயா மற்றும் அவரது மகன் இந்து குமார் (வயது 22) உடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்த நிலையில் அதே லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் ஐயப்பன் (வயது 35) உடன் ஜெயாவிற்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அந்த பழக்கமானது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதையும் படியுங்க: படுக்கையில் மாணவனுடன் ஆசிரியை உல்லாசம்… ஜன்னல் வழியாக பார்த்த கணவன் : டுவிஸ்ட்!
ஜெயாவின் மகன் இந்து குமார் வளர வளர தனது தாயுடனான கள்ளக்காதலை முறித்துக் கொள்ளும்படி பலமுறை ஐயப்பனிடமும் கள்ளக்காதலை முறித்துக் கொள்ளும்படி எச்சரித்து வந்ததாகவும் இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஜெயாவுடன் கள்ளக்காதலை முறித்துக் கொள்ள மறுத்த நிலையில் ஐயப்பனை தீர்த்துக்கட்ட கள்ளக்காதலி ஜெயாவும் அவரது மகன் இந்துகுமாரும் திட்டம் தீட்டியுள்ளனர்.
வழக்கம்போல் (10.05.2025) நேற்று இரவு ஜெயா புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டிற்கு ஐயப்பனை வரவழைத்துள்ளார்.
இந்த நிலையில் அங்கே ஏற்கனவே பதுங்கி இருந்த ஜெயாவின் மகன் இந்துக்குமார் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் ஐயப்பனின் தலையில் தாக்கியுள்ளார்.
இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஐயப்பன் துடிதுடித்துள்ளார். ஆத்திரமடங்காத கள்ளக்காதலி ஜெயா ஐயப்பனின் முகம் தலை உள்ளிட்ட இடங்களில் கல்லால் நசுக்கி துடிக்க துடிக்க கொலை செய்து லட்சுமிபுரம் பகுதியில் ஜெயா புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கும் பகுதியில் சடலத்தை வீசிவிட்டு ஒன்றுமே நடக்காததை போல் தாயும் மகனும் இருந்துள்ளனர்.
இதனை அடுத்து சடலத்தை கண்ட பகுதி மக்கள் உடனடியாக திருவலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி டிஎஸ்பி பழனி காவல் ஆய்வாளர்கள் கருணா முரளிதரன் உதவி ஆய்வாளர்கள் தர்மன் மணிகண்டன் ஆதர்ஷ் உள்ளிட்ட போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஐயப்பனின் கள்ளக்காதலி ஜெயா மற்றும் அவரது மகன் இந்துக்குமார் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் தாயும் மகனும் சேர்த்துக்கொண்டு திட்டம் தீட்டி ஐயப்பனை கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
தாய் மகன் இருவரை கைது செய்து திருவலம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயை போன்று பார்க்க வேண்டிய பெண்ணிடம் வயதுக்கு மீறிய உறவு வைத்துக் கொண்டதால் பரிபோன விவசாயின் உயிர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.