திருச்சியில் குடித்துவிட்டு துன்புறுத்தி வந்த மகனை, தாயும், மருமகளும் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி: திருச்சி சஞ்சீவி நகர், வாடாமல்லி தெருவைச் சேர்ந்தவர் குணா என்கிற குணசேகரன் (34). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு சுலோச்சனா என்பவர் உடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மதுபோதைக்கும், கஞ்சாவுக்கும் அடிமையான குணசேகரன், தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவி மற்றும் தாய் காமாட்சி ஆகியோரிடம் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (நவ.21) தாய் காமாட்சி, தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து உள்ளார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குணசேகரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, பிரேதப் பரிசோதனை முடிவு வெளியாகி, போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
காரணம், அது தற்கொலை அல்ல, கொலை என தெரிய வந்தது. பின்னர், குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், குணாவின் வீட்டுக்கு எதிரில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் சோதனை செய்து உள்ளனர். அதில், சம்பவம் நடந்த அன்று இரவு குணாவின் வீட்டுக்குள் 3 பேர் சென்று வருவதும், வீட்டின் வெளியில் தாய் மற்றும் மனைவி அமர்ந்து இருப்பதும் தெரிய வந்தது.
பின்னர், தாய் மற்றும் மனைவியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், சம்பவம் நடந்த நாள் அன்று, வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த குணா, தாய் மற்றும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அதன் பிறகு, அவர் வீட்டிற்குள் சென்று தூங்கி உள்ளார்.
அப்போது, தாய் காமாட்சியின் உறவினர்களான திருநங்கை விக்கி என்ற லித்தின்யா ஸ்ரீ (19), திருநங்கை குபேந்திரன் என்ற நிபுயா (19) மற்றும் விஜயகுமார் (48) ஆகிய மூவரும் குணசேகரனின் வீட்டுக்கு வந்து உள்ளனர். இதனையடுத்து, வீட்டில் இருந்த காமாட்சியும், சுலோச்சனாவும் வீட்டிற்கு வெளியில் வந்து அமர்ந்து, யாரும் வராமல் பார்த்து உள்ளனர்.
இதையும் படிங்க: ’பெத்த அப்பன்தானே விட்ரலாமா..’ தாய் கதறிச் சொன்ன ‘அந்த’ வார்த்தை.. போலீசார் அலட்சியமா?
இதனிடையே, உள்ளே சென்ற மூவரும், விஜயகாந்த் நடித்த ராஜ்ஜியம் என்ற படத்தில் வருவது போல, குணசேகரனின் உடலில் காலி ஊசியைச் செலுத்தி உள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து துப்பட்டாவால் குணசேகரனின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து, உடலை தற்கொலை செய்வது போன்று செட்டப் செய்து உள்ளது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இதனை கொலை வழக்காகப் பதிவு செய்த கோட்டை காவல் நிலைய போலீசார், காமாட்சி, சுலோச்சனா, விக்கி என்ற லித்தின்யா ஸ்ரீ , குபேந்திரன் என்ற நிபுயா மற்றும் விஜயகுமார் ஆகிய 5 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.