காதலித்து ஏமாற்றிய திமுக நிர்வாகியின் மகன் : ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி!!

4 November 2020, 7:51 pm
Suicide Atempt - Updatenews360
Quick Share

சேலம் : காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மரவனேரி பகுதியை சேர்ந்தவர் இந்துபிரியா. இவர் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சேலம் செட்டிசாவடி காட்டுவளவு பகுதியை சேர்ந்த திமுக ஊராட்சி துணை செயலாளர் ராஜ் என்பவரின் மகன் கலைசெல்வன் என்பவர் அடிக்கடி சூப்பர் மார்கெட்டிற்கு வந்து செல்லும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நட்பாக பழகி, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கலைச்செல்வன் வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால் பாதிக்கப்பட்ட பெண் திருமணத்தை நிறுத்த கோரி சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையலி கலைச்செல்வன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் காதலித்து ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த கலைச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட பெண் இந்துபிரியா சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.காதலித்து ஏமாற்றப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 18

0

0