தமிழில் பல வருடங்களுக்கு முன் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான சோனியா அகர்வால் , தொடர்ந்து செல்வராகவனின் படத்தில் மட்டுமே சோனியா நடித்து வந்தார். செல்வா எடுத்த 7G ரெயின்போ காலனி படமும் பெரிய ஹிட் அடித்தது.
அந்த படத்தின் மூலம் தமிழில் பலருக்கு பேவரைட் நடிகையாக சோனியா அகர்வால் ஆனார். ஆனால் போக போக அந்த சோனியாவிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பின், சோனியா செல்வராகவனை கடைசியில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவரை விவாகரத்து செய்துவிட்டு, சோனியா தனியாள் ஆனார்.
தமிழ் மட்டுமல்லாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். தற்போது, சீரியல்களிலும் நடித்து வருகிறார் அம்மணி. இந்நிலையில், தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், சோனியா அகர்வால் செல்வராகவன் குறித்தும், தனுஷ் குறித்துமான தனது பார்வையை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
செல்வராகவன் நடிப்பில் எனக்கும் தனுஷுக்கும் குரு. அவர் எனக்கு சிறந்த குரு , ரொம்ப கடுமையான குருவும் கூட. காதல் கொண்டேன் திரைப்படத்தில்தான் எனக்கு கெரியர் ஸ்டார்ட் ஆச்சு. தனுஷ் முன்பே ஒரு படம் பண்ணியிருந்தார்..
முதன் முதலாக தனுஷை செட்டில் பார்த்துவிட்டு என் அம்மா கேட்டாங்க, இவர்தான் ஹீரோவா அப்படினு. அதன் பிறகு அம்மா என்னிடம் வந்து , நாம நல்ல முடிவுதான் எடுத்திருக்கோமா? இந்த படம் உன் அறிமுகப்படமாச்சே அப்படினு புலம்பினாங்க. அதன் பிறகு நான் அம்மாவை சமாதானப்படுத்தினேன். அம்மா சில ஸ்கிரிப்ட் அப்படியாகவும் , கதாபாத்திரங்கள் அப்படியாகவும் இருக்கும் அப்படினு சொன்னேன். செல்வராகவன் சார் சில நேரங்களில் அழுத்தம் காரணமாக என்னை சத்தம் போடுவார். அந்த சமயத்தில் தனுஷ்தான் எனக்கு ஆறுதலாக பேசி என்னை சமாதானம் செய்வார்.’ தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார் சோனியா அகர்வால்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.