இந்திய சினிமாவின் உயரிய விருதுகாக கவனிக்கப்படுவது தேசிய விருது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படம், இயக்குநர், கதை, வசனம், திரைக்கதை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, நடிகர், நடிகை என அனைத்து தொழில்நுட்பங்களுக்கு விருதுகள் வழங்கி இந்திய அரசு கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தமிழ் சினிமா படமான சூரரைப்போற்று 5 விருதுகளை குவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் இந்த படம் ஒடிடியில் வெளியானது. என்னதான் திரையரங்கில் படம் வெளியாகவில்லை என்றாலும், படத்தின் வலுவான கதை, பேச வைத்த வசனம், நடனமாட வைத்த இசை என ஒட்டுமொத்தமும் அனைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
குறிப்பாக நடிகர் சூர்யாவின் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம். ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கும். இப்படி படத்தில் உள்ள ஒவ்வொரு தொழிநுட்பக் கலைஞர்களும் அயராது தங்களது பங்களிப்பை கொடுத்தனர்.
படம் வெளியானதும் சூப்பர் டூப்பர் ஹிட் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொண்டாட வைத்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது 68வது தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வாகியுள்ளது. குறிப்பாக சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக அபர்ணா முரளி, சிறந்த திரைக்கதைக்காக சுதா கொங்கரா, சிறந்த படம் மற்றும் சிறந்த இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வெற்றியை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வரும் சூழலில் நாளை நடிகர் சூர்யாவுக்க பிறந்தநாள் என்பது அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. சூர்யாவின் பிறந்தநாளகுக் சூப்பரான கிஃப்ட் என உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர்.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.