தமிழகம்

உடைகிறதா திமுக – காங்கிரஸ் கூட்டணி..? இதற்காக ’அதை’ செய்யவில்லையா? EX CM சொல்வது என்ன?

புதுச்சேரியில் எதிர்கட்சி அந்தஸ்தில் உள்ள திமுகவுக்கும், அதனுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரி: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், புதுச்சேரியில் என்.ஆர்​.​காங்​கிரஸ் – பாஜக கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸ் – திமுக கூட்டணி போட்டி​யிட்டது. 30 தொகுதி​களிலும் போட்டி​யிட்ட இந்தக் கூட்ட​ணி, 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக, திமுக 6 இடங்களைப் பிடித்த நிலையில், திமுகவை விட கூடுதலான இடங்களில் போட்டி​யிட்ட காங்கிரஸ் இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது.

இதனால், அங்கீகரிக்​கப்பட்ட எதிர்கட்​சி​யானது திமுக. ஆனால், ஆளும் கட்சியாக இருந்த தங்களுக்கு எதிர்​கட்சி அந்தஸ்​து கூட கிடைக்​காமல் போனதில் புதுச்சேரி காங்கிரஸ் வருத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் திமுக – காங்கிரஸ் இடையே ஆரம்பம் முதலே மோதல் இருந்து வருகிறது.

மேலும், சமீபத்தில், புதுச்சேரி அரசு தொழில்​நுட்ப பல்கலைக்​கழகத்தில் படிக்கும் வட மாநில மாணவி​யிடம் நான்கு பேர் அத்துமீறி நடந்து கொண்ட விவகாரம் அரசுக்கு எதிராகத் திரும்​பிய நிலையில், அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல்கள் ஒலித்தா. காங்கிரஸ் கட்சி​யினரும் போராட்டம் நடத்தினர்.

ஆனால், திமுக தரப்பில் எந்தவித போராட்​டத்​தையும் அறிவிக்க​வில்லை, அக்கட்சியின் மாநிலத் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா. காரணம், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் இருக்கும் நிலையில், வடமாநில மாணவி விவகாரத்தில் தலையிட்டால் பாஜக கூட்டணி இதனைத் திருப்பும் என்பதால் சிவா தவிர்த்திருக்​கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ’ஆத்தி போலீசு’.. ஓடிய திமுக கவுன்சிலரின் மகன்.. பட்டாக் கத்திகளுடன் சிக்கியது எப்படி?

இந்த நிலையில், இது தொடர்பாக தனியார் நாளிதழுக்குப் பேசிய சிவா, “வடமாநில மாணவி விவகாரத்தில் காங்கிரஸ் அவர்கள் எண்ணத்தின் அடிப்​படையில் போராட்டம் நடத்துகின்றன, அதில் நாங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த விஷயத்தில் காங்கிரஸ் அரசியல் செய்ய​வில்லை, அவர்களின் அரசியலைச் செய்கின்​றனர்” எனக் கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளித்து பேட்டி அளித்துள்ள புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயண​சாமி, “ஆளுங்கட்சி, எதிர்​கட்சி என்ற வித்த​யாசமின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்​கின்​றனர். நாங்கள் யாரையும் போராட்​டத்​துக்கு அழைக்கவில்லை. எங்கள் கட்சியின் வேலையைச் செய்கிறோம். அவர்க,ள் அவர்களது கட்சியின் வேலையைச் செய்கின்​றனர். திமுக கூட்ட​ணியில் நாங்கள் இருக்​கிறோமா இல்லையா என்பதை திமுகவிடம்தான் கேட்க வேண்டும்” எனக் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.