தென்மாவட்டங்களை புரட்டியெடுக்கப்போகும் கனமழை : 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!!

18 November 2020, 2:12 pm
Heavy Rain - Updatenews360
Quick Share

சென்னை : அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கன்னியாகுமரி கடல்பகுதியில் மேல்அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன்காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.

அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரையில், நகர் மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகர் பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 22

0

0

1 thought on “தென்மாவட்டங்களை புரட்டியெடுக்கப்போகும் கனமழை : 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!!

Comments are closed.