டிசம்பர் 1ம் தேதி முதல் சென்னை-விஜயவாடா இடையே சிறப்பு ரயில் இயக்கம்…!!

29 November 2020, 2:45 pm
southern railway - updatenews360
Quick Share

சென்னை: டிசம்பர் 1ம் தேதி முதல் சென்னை-விஜயவாடா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க மாா்ச் 25ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கம் தற்போது தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை-விஜயவாடா இடையே சிறப்பு ரயில் டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் இயக்கப்படுவதக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

விஜயவாடா-சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்(வண்டி எண்: 02711) இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் தினசரி காலை 6.10 மணிக்கு விஜயவாடா ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

மறுமார்க்கமாக சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-விஜயவாடா(02712) இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் தினசரி மதியம் 2.10 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 19

0

0