“பாடும் நிலா எழுந்து வா” – கூட்டு பிரார்த்தனைக்கு ரஜினிகாந்த் அழைப்பு..!

20 August 2020, 1:03 pm
Quick Share

பாடகர் எஸ்.பி.பி குணமடைய கூட்டு பிரார்த்தனைக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

ஆனால் கொரோனா வீரியம் அதிகம் ஆனதால் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த சூழலில் மருத்துவமனை நிர்வாகம் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது எனவும், வென்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் சினிமா பிரபலங்கள் மற்றும் எஸ்.பி.பி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவத்தை மிஞ்சிய இறை ஆசியால் எஸ்.பி.பி மீண்டு வருவார் என அனைவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மட்டும் இன்றி இன்று மாலை 6 மணிக்கு எஸ்.பி.பிக்காக கூட்டு பிரார்த்தனை செய்ய திரையுலக பிரபலங்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பாடும் நிலா எழுந்து வா” என குறிப்பிட்டு எம்.பி பாலசிப்ரமணியம் குணமடைந்து மீண்டுவர அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Views: - 10

0

0