“எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது” – எஸ்.பி.பி சரண் தகவல்..!

27 August 2020, 6:13 pm
Quick Share

எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த எஸ்.பி.பி மீண்டுவர வேண்டும் என உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களும், பிரபலங்களும் பல்வேறு கட்ட பிரார்த்தனைகளை முன்னெடுத்தனர். இதனை தொடர்ந்து நாள்தோறும் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது.

இந்த சூழலில் ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி-யின் உலல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார். மேலும், சுயநினைவு இன்றி இருந்த தனது தந்தையின் உடல்நிலை தற்போது சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.