“எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” – எம்ஜிஎம் மருத்துவமனை தகவல்

16 August 2020, 5:09 pm
Quick Share

பின்னனி பாடகர் எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம்ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று கொரோனா தொற்றுகாரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்பிபி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு மருத்துவ நிபுணர் குழு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. ஆனால், அவரின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்த நிலையில் அவர் மீண்டு வர வேண்டும் என பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

இயக்குனர் பாரதி ராஜா, இசை ஞானி இளையராஜா உள்ளிட்டோர் தங்களின் உருக்கமான பதிவுகளை சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.

இந்த சூழலில், நேற்று எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று அவர் கண் விழித்து பார்த்ததாகவும், உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Views: - 30

0

0