மருத்துவருடன் அமர்ந்து பேசுகிறார் : எஸ்.பி.பி குறித்து வெளியான புதிய ‘அப்டேட்‘!!

14 September 2020, 6:24 pm
SPB Health Update - updatenews360
Quick Share

சென்னை : பிசியோதெரப்பி சிகிச்சைக்கு பின்னணி பாடகர் எஸ்.பி.பி ஒத்துழைப்பு தருகிறார் என அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணயிம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் மீண்டு வர வேண்டும் என சினிமா பிரபலங்கள் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட நடிகர் நடிகைகள், பின்னணி பாடகர்கள் உட்பட ரசிகர்கள் பலரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு நாளும் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. சில வதந்திகளும் பரவியது, அதற்கு எஸ்.பி.பி மகன் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியட்டார். தொடர்ந்து அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் எஸ்.பி.பிக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளதாகவும், முழுவதுமாக கொரோனாவில் இருந்து குணமடைந்ததாக அவரது மகன் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு நுரையீரல் சிகிச்சை செய்ய மருத்துவமனை ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், பிசியோதரப்பி சிகிச்சைக்கு எஸ்.பி.பி முழு ஒத்துழைப்பு தருவதாக அவரது மகன் இன்று வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

அவரின் நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை அமர்ந்து மருத்துவர்களிடம் பேசுகிறார் என்று தெரிவித்துள்ளார். அவருக்கு பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 7

0

0