எஸ்.பி.பி குணமடைய வேண்டி நாளை கூட்டுப்பிரார்த்தனை : திரைப்பிரபலங்களுக்கு இயக்குனர் பாரதிராஜா அழைப்பு

19 August 2020, 1:25 pm
Bharathiraja- Updatenews360
Quick Share

சென்னை : கொரோனாவால் பாதிப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் பூரண குணமடைய கூட்டுப்பிரார்த்தனை நடத்த இயக்குனர் பாரதி ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்புக்கு அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால் கொரோனா வீரியம் அதிகம் ஆனதால் கடத்ந ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வரும் பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் பூரண குணமடைய வேண்டி நாளை மாலை 6 மணிக்கு அனைத்து தரப்பினரும் கூட்டுப்பிரார்த்தனை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனைத்து திரைப்பட நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு பிடித்த எஸ்.பி.பி பாலசுப்பிரமணியம் பாடலை ஒலிக்கவிட்டு பிரார்த்தனை செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக நடிகர் எம்ஜிஆர் உடல்நிலை பாதித்து வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த போது கூட்டுப்பிரார்த்தனை செய்யப்பட்டதாகவும். இதன் பின் அவர் தமிழகம் திரும்பி வந்ததாகவும் அறிக்கையில் இயக்குனர் பாரதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

Views: - 26

0

0