‘கோமா‘ நிலையில் எஸ்.பி.பி : காவல்துறை கட்டுப்பாட்டில் மருத்துவமனை!!

25 September 2020, 12:12 pm
SPB Mgm - updatenews360
Quick Share

சென்னை : எஸ்.பி.பி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதால் எம்ஜிஎம் மருத்துவமனை காவல்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த எஸ்.பி.பி மீண்டுவர வேண்டும் என உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களும், பிரபலங்களும் பல்வேறு கட்ட பிரார்த்தனைகளை முன்னெடுத்தனர். இதனை தொடர்ந்து நாள்தோறும் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது.

இந்த நிலையில் எஸ்.பி.பி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

எஸ்பிபிக்கு கோமா நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து திரைப்பிரபலங்கள் மருத்துவமனையில் நலம் விசாரிக்க வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனை தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.

மருத்துவமனையில் காவல் ஆணையர் அருண், மருத்துவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதே போல எஸ்பிபியின் தங்கை எஸ்.பி சைலஜா, மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் வந்துள்ளனர். இதனால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

Views: - 1

0

0