தீபாவளி, ஆயுதப்பூஜைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் : தமிழக அரசு அறிவிப்பு

Author: Babu Lakshmanan
11 October 2021, 1:29 pm
Quick Share

தீபாவளி மற்றும ஆயுதப்பூஜை பண்டிகைகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில், பொதுமக்களின வசதிக்காக, அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த வாரம் ஆயுதப் பூஜை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக, வெளியூர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் சென்னையில், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் என 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதேபோல, தீபாவளி சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

அதில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நவ.,1ம் தேதி முதல் சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து 16,540 சிறப்பு பேருந்துகளும், பண்டிகை முடிந்த பிறகு சொந்த ஊரில் இருந்து திரும்பும் மக்களின் வசதிக்காக, 17,719 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 425

0

0